நீங்கள் ஒரு டெவெலப்பரா?
Chrome ஆப்ஸை வெளியிடுதல்எங்கள் சேவை விதிமுறைகளை ஜனவரி 27, 2024ல் புதுப்பித்துள்ளோம். கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள முக்கியமான மாற்றங்கள் குறித்த சுருக்கவிவரத்தையும் கீழே வழங்கியுள்ளோம்.
1.1 Google Chrome ஆன்லைன் ஸ்டோரை (“ஆன்லைன் ஸ்டோர்”) பயன்படுத்துவதன் மூலம் https://policies.google.com/terms தளத்தில் உள்ள Google சேவை விதிமுறைகளையும் https://policies.google.com/privacy தளத்தில் உள்ள Google தனியுரிமைக் கொள்கையையும் இந்த ஆன்லைன் ஸ்டோர் சேவை விதிமுறைகளையும் (அனைத்தும் சேர்ந்து “விதிமுறைகள்” என்று அழைக்கப்படும்) ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு இணங்குவதாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
1.2 Google Chromeமில் பயன்படுத்துவதற்காக, தயாரிப்புகளை (Google Chromeமில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு, ஆன்லைன் ஸ்டோர் மூலம் விநியோகிக்கப்படுகின்ற மென்பொருள், உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் என வரையறுக்கப்படுவது) பிரவுசிங் செய்ய, கண்டறிய, பதிவிறக்க ஆன்லைன் ஸ்டோரை நீங்கள் பயன்படுத்தலாம். இவற்றில் சில தயாரிப்புகள் Google வழங்குபவையாகவும் மற்றவை Googleளைச் சாராத மூன்றாம் தரப்பினர் வழங்குபவையாகவும் இருக்கக்கூடும். Google அல்லாத மூலத்திலிருந்து ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் எந்தத் தயாரிப்பிற்கும் Google பொறுப்பேற்காது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
1.3 இந்த விதிமுறைகள் (1) உங்களுக்குக் காட்டப்படும்போது, ஏற்கிறேன் அல்லது ஒப்புக்கொள்கிறேன் என்ற விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலமோ (2) ஆன்லைன் ஸ்டோர் ஆப்ஸ் அல்லது வலைச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலமோ அவற்றை ஏற்கிறீர்கள்.
1.4 ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்த நீங்கள் 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். நீங்கள் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர் என்றால் ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வக் காப்பாளரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
2.1 எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் Googleளின் சொந்த விருப்பப்படி, உங்களுக்கோ பயனர்களுக்கோ ஆன்லைன் ஸ்டோர் சேவையை (அல்லது ஆன்லைன் ஸ்டோரில் உள்ள அம்சங்களை) வழங்குவதை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ Google நிறுத்தக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
2.2 உங்கள் கணக்கிற்கான அணுகலை Google முடக்கும்பட்சத்தில் ஆன்லைன் ஸ்டோர், உங்கள் கணக்கு விவரங்கள், உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள ஃபைல்கள் அல்லது பிற தயாரிப்புகளை உங்களால் அணுக முடியாமல் போகக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
2.3 ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்தவும் இயக்கவும் தேவையான ஆதரவை (தயாரிப்புகளை எப்படிக் கண்டறிவது, பதிவிறக்குவது, அகற்றுவது போன்றவை உட்பட) ஆன்லைன் ஸ்டோர் ஆப்ஸிற்கான பயனர் இடைமுகத்தில் Google வழங்குகிறது. ஆன்லைன் ஸ்டோரில் டெவெலப்பர்கள் வழங்கும் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர் உதவி சேவையை Google வழங்குவதில்லை. தாங்கள் வழங்கும் வாடிக்கையாளர் உதவி சேவையை நிர்ணயிக்கும் பொறுப்பு ஒவ்வொரு டெவெலப்பரிடமும் இருக்கிறது. நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
3.1 ஆன்லைன் ஸ்டோரில் உள்ள குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்த உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, Google கணக்கு விவரம், முகவரி, பில்லிங் விவரங்கள் போன்று உங்களைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டியிருக்கும். Googleளிடம் நீங்கள் வழங்கும் இதுபோன்ற தகவல்கள் எப்போதும் துல்லியமாகவும் சரியாகவும் சமீபத்தியதாகவும் இருக்கும் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
3.2 (a) விதிமுறைகள், (b) தொடர்புடைய அதிகார எல்லைகளில் பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை அல்லது பொதுவாக ஏற்கப்படும் நடைமுறைகள்/வழிமுறைகளால் அனுமதிக்கப்படும் நோக்கங்களுக்காக மட்டும் ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் தொடர்பான அமெரிக்கக் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க வணிகத்துறையின் ஏற்றுமதி நிர்வாக ஒழுங்குமுறைகள், அனுமதித் திட்டங்கள் உட்பட (ஆனால் இவை மட்டும் அல்ல) பொருந்தக்கூடிய எல்லா ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கும் இணங்க ஒப்புக்கொள்கிறீர்கள். ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்க அல்லது பொருந்தக்கூடிய பிற ஏற்றுமதிச் சட்டங்களின் கீழ் ஏற்றுமதிகள் அல்லது சேவைகளைப் பெற நீங்கள் தடைசெய்யப்படவில்லை என்பதைத் தெரிவித்து உத்திரவாதம் அளிக்கிறீர்கள். தயாரிப்புகளைப் பதிவிறக்குவது, நிறுவுவது, பயன்படுத்துவது தொடர்பான அனைத்து உள்ளூர் சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
3.3 Google வழங்கும் இடைமுகம் தவிர வேறு எந்த முறையிலும் ஆன்லைன் ஸ்டோரை அணுகமாட்டீர்கள் (அல்லது அணுக முயற்சி செய்யமாட்டீர்கள்) என்று ஒப்புக்கொள்கிறீர்கள். Googleளுடன் செய்துகொண்ட தனி ஒப்பந்தம் மூலம் குறிப்பிட்டு அனுமதிக்கப்பட்டிருந்தால் வேறு முறையில் அணுகலாம். தானியங்கு முறைகள் (ஸ்கிரிப்ட்டுகள், கிராலர்கள், அதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை) மூலம் ஆன்லைன் ஸ்டோரை அணுகமாட்டீர்கள் (அல்லது அணுக முயற்சி செய்யமாட்டீர்கள்) என்று குறிப்பிட்டு ஒப்புக்கொள்கிறீர்கள், ஆன்லைன் ஸ்டோர் இணையதளத்தில் உள்ள robots.txt ஃபைலில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளுடன் இணங்க உறுதியளிக்கிறீர்கள்.
3.4 ஆன்லைன் ஸ்டோர் சேவைகளுடன் (அல்லது ஆன்லைன் ஸ்டோருடன் இணைக்கப்பட்டுள்ள சேவையகங்கள் மற்றும் நெட்வொர்க்குகள்) குறுக்கிடும் அல்லது இடையூறு செய்யும் எந்த வகையான செயலிலும் ஈடுபடமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ஆன்லைன் ஸ்டோரில் உள்ள எந்தவொரு தயாரிப்பையும் Google அல்லது மூன்றாம் தரப்பால் இயக்கப்படும் சேவையகங்கள், நெட்வொர்க்குகள் அல்லது இணையதளங்களுடன் குறுக்கிடும் அல்லது இடையூறு செய்யும் வகையில் பயன்படுத்தமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
3.5 Googleளுடன் செய்துகொண்ட தனி ஒப்பந்தம் மூலம் குறிப்பிட்டு அனுமதிக்கப்பட்டால் தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் ஆன்லைன் ஸ்டோரை மறுஉருவாக்கம் செய்தல், போலியாக உருவாக்குதல், நகலெடுத்தல், விற்பனை செய்தல், வர்த்தகம் செய்தல், மறுவிற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். தயாரிப்பின் டெவெலப்பருடன் செய்துகொண்ட தனி ஒப்பந்தம் மூலம் குறிப்பிட்டு அனுமதிக்கப்பட்டால் தவிர, எந்த நோக்கத்திற்காகவும் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள எந்தவொரு தயாரிப்பையும் மறுஉருவாக்கம் செய்தல், போலியாக உருவாக்குதல், நகலெடுத்தல், விற்பனை செய்தல், வர்த்தகம் செய்தல், மறுவிற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
3.6 ஆன்லைன் ஸ்டோரையும் தயாரிப்புகளையும் பயன்படுத்துவது, விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் கடமைகளை மீறுவது, Googleளுக்கு ஏற்படக்கூடிய இழப்பு அல்லது சேதம் உட்பட, அதுபோன்ற மீறலின் காரணமாக ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு (உங்களுக்கோ மூன்றாம் தரப்புக்கோ Google எந்தவிதமான பொறுப்பையும் ஏற்காது) என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
3.7 ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் தயாரிப்புகளுக்கான சட்டப்பூர்வ உரிமை, தலைப்பு, பலன் ஆகியவை Google மற்றும்/அல்லது மூன்றாம் தரப்புக்குச் சொந்தமானது என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இதில் தயாரிப்புகளில் உள்ள பொருந்தக்கூடிய அறிவுசார் சொத்துரிமை எல்லாமும் இன்ன பிறவும் அடங்கும். "அறிவுசார் சொத்துரிமை" என்பது காப்புரிமைச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம், வர்த்தக ரகசியச் சட்டம், வர்த்தக முத்திரைச் சட்டம், அநியாயப் போட்டிச் சட்டம் ஆகியவற்றின் கீழுள்ள எல்லா உரிமைகளையும் உலகமெங்குமுள்ள பிற உரிமையுடைமைக்கான எல்லா உரிமைகளையும் குறிப்பதாகும். பின்வருபவற்றைச் செய்யமாட்டீர்கள் என்றும் மூன்றாம் தரப்பினரையும் இவற்றைச் செய்ய அனுமதிக்கமாட்டீர்கள் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள் (i) அனுமதிக்கப்பட்டால் தவிர தயாரிப்புகளை நகலெடுத்தல், விற்பனை செய்தல், உரிமம் அளித்தல், விநியோகித்தல், பரிமாற்றம் செய்தல், மாற்றுதல், மாதிரி உருவாக்குதல், மொழிபெயர்த்தல், அவற்றிலிருந்து வருவிக்கப்பட்டவற்றைத் தயாரித்தல், தொகுப்பை நீக்குதல், பொறியியல் தன்மையைக் குலைத்தல், கட்டமைப்பைக் கலைத்தல், (ii) ஏதேனும் செயல்பாட்டால் வழங்கப்பட்ட, செயலாக்கப்பட்ட அல்லது அமலாக்கப்பட்ட பாதுகாப்பை அல்லது உள்ளடக்கப் பயன்பாட்டு உரிமைகளை (டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை அல்லது முன்னனுப்புதலைப் பூட்டுதல் செயல்பாட்டிற்கு இணங்காமை உட்பட) மீறவோ மாற்றவோ தயாரிப்புகளில் முயற்சி செய்தல், (iii) ஏதேனும் சட்டம் அல்லது மூன்றாம் தரப்பு உரிமைகளை அத்துமீறி, உள்ளடக்கத்தை அணுகுதல், நகலெடுத்தல், பரிமாற்றுதல், குறியீட்டை மாற்றுதல், மறுபரிமாற்றம் செய்தல் போன்றவற்றைச் செய்ய தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் அல்லது (iv) Google அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமை அறிவிப்புகள், வர்த்தகமுத்திரைகள் அல்லது தயாரிப்புகளில் அடங்கியுள்ள அல்லது இணைக்கப்பட்டுள்ள பிற உரிமையுள்ளவர்களின் உரிமைகளை அகற்றுதல், கேடுவிளைத்தல், மாற்றுதல் ஆகியவற்றைச் செய்தல்.
3.8 ஆன்லைன் ஸ்டோரில் உள்ள தயாரிப்புகளை முன்னோட்டமிடுவது, மதிப்பாய்வு செய்வது, கொடியிடுவது, ஃபில்டர் செய்வது, மாற்றுவது, மறுப்பது, அகற்றுவது போன்ற உரிமை Googleளுக்கு உள்ளது (ஆனால் அவற்றைச் செய்வதற்கான கட்டாயம் அதற்கு இருக்காது). இருப்பினும், ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்துவதன் மூலம் தவறான, நாகரீகமற்ற அல்லது ஆட்சேபிக்கத்தக்க தயாரிப்புகளைப் பார்க்க நேரிடலாம் என்பதை ஏற்றுக்கொண்டு சொந்த விருப்பத்தின் பேரில்தான் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
3.9 திரும்பப் பெறுதல்: ஆன்லைன் ஸ்டோரில் வாங்கிய எந்தவொரு தயாரிப்பையும் அதை வாங்கிய முதல் (பதிவிறக்கியது அல்ல) 30 நிமிடத்திற்குள் திருப்பிக்கொடுத்து அதற்காகச் செலுத்திய முழுக் கட்டணத்தையும் திரும்பப்பெறலாம். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை ஒருமுறை மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும்; அதே தயாரிப்பை மீண்டும் வாங்கினால் இரண்டாவது முறை திருப்பிக் கொடுக்க முடியாது. தயாரிப்பைத் திருப்பிக்கொடுக்கும் வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அது உங்களுக்கு ஆன்லைன் ஸ்டோரின் பயனர் இடைமுகத்தின் மூலம் வழங்கப்படும்.
3.10 திரும்பப் பெறுதல் மற்றும் பில்லிங் தொடர்பான சிக்கல்கள்: ஆன்லைன் ஸ்டோரில் வாங்கும்போது ஏற்படும் பில்லிங் தொடர்பான சிக்கல்களுக்கு Google பொறுப்பேற்காது. பில்லிங் தொடர்பான எல்லாச் சிக்கல்களும் டெவெலப்பருக்கோ கட்டணச் செயல்பாட்டாளருக்கோ உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கோ அனுப்பப்பட வேண்டும்.
3.11 ரேட்டிங்குகள், கருத்துகள், சிக்கல்கள் ஆகியவற்றைப் பதிவிடுவதற்கான கொள்கைகள்: ரேட்டிங்குகளும் கருத்துகளும் உதவிகரமாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்க வேண்டும். Chrome ஆன்லைன் ஸ்டோரில் உள்ள உள்ளடக்கத்திற்குக் கருத்துகளை வழங்குவதன் மூலம் உதவிகரமான யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளலாம், சிறந்த உள்ளடக்கத்தையும் சேவைகளையும் மற்ற Chrome ஆன்லைன் ஸ்டோர் பயனர்கள் தெரிந்துகொள்ள உதவலாம்.
ரேட்டிங்குகள் மற்றும் கருத்துகளுக்கான Chrome ஆன்லைன் ஸ்டோர் கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மனதைப் புண்படுத்தும் கருத்துகள் அல்லது இந்தக் கொள்கைகளை மீறும் கருத்துகள் தானியங்கு மதிப்பாய்வு மற்றும் நிபுணர் மதிப்பாய்வு மூலம் அகற்றப்படும். மேலும், மீண்டும் மீண்டுமோ மோசமான வகையிலோ கொள்கைகளை மீறுபவர்கள் Chrome ஆன்லைன் ஸ்டோரில் பதிவிடுவதற்கான தகுதியை இழக்கக்கூடும். சிக்கலைச் சரிசெய்வதற்கான மாற்றத்தைச் செய்து நீங்கள் சமர்ப்பிக்கும் வரை அகற்றுதல் காலவரையின்றி அமலில் இருக்கும். அமலாக்க நடவடிக்கைகள் இயல்பாகவே உலகளவில் எடுக்கப்படும். உங்கள் அமலாக்க நடவடிக்கை பிராந்தியக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இருந்தால், அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
3.11a ஸ்பேம் மற்றும் போலியான கருத்துகள்: நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உள்ளடக்கம் அல்லது சேவை தொடர்பான உங்கள் அனுபவத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் கருத்துகள் இருக்க வேண்டும்.
3.11b தலைப்புடன் தொடர்பில்லாத கருத்துகள்: கருத்துகள் தலைப்பிற்குத் தொடர்புடையதாகவும், நீங்கள் கருத்து வழங்கும் உள்ளடக்கம், சேவை, அனுபவம் ஆகியவற்றுக்குத் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும்.
3.11c விளம்பரப்படுத்துதல்: கருத்துகள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், நீங்கள் கருத்து வழங்கும் உள்ளடக்கம் அல்லது சேவையைத் தவிர்த்து வேறு எதையாவது விளம்பரப்படுத்துவதாக இருந்தால் அந்தக் கருத்துகள் பயனுள்ளதாக இருக்காது.
3.11d ஆதாய முரண்: கருத்துகள் உண்மையானதாகவும் சார்பற்றதாகவும் இருக்கும்போது அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை நிதி ஆதாய நோக்கமில்லாதவர்கள் எழுதியதாக இருக்க வேண்டும்.
3.11e பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கம்: கருத்துகள் உங்களுடையதாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் தனிப்பட்ட கருத்துகளைப் பிரதிபலிக்க வேண்டும்.
3.11f தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள்: அனுபவங்களைப் பகிர்வதே கருத்துகளின் நோக்கமாகும். பாதுகாக்கவேண்டிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடாமல் எதைப் பற்றியும் உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
3.11g சட்டவிரோத உள்ளடக்கம்: சட்டத்திற்கும், நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் விதிமுறைகள் அல்லது சட்டரீதியான ஒப்பந்தங்களுக்கும் இணங்கும்படி உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
3.11h வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்: பெரும்பாலான மக்களைச் சென்றடைவதே Chrome ஆன்லைன் ஸ்டோரின் நோக்கமாகும். இதில் வழங்கப்படும் கருத்துகள் அந்த நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
3.11i வெறுப்புப் பேச்சு: எல்லா மக்களையும் சென்றடைவதே Chrome ஆன்லைன் ஸ்டோரின் நோக்கமாகும். இதில் வழங்கப்படும் கருத்துகள் அந்த நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
3.11j மனதைப் புண்படுத்தும் கருத்துகள்: பொழுதுபோக்கிற்காகவும் தகவலளிப்பதற்காகவும் மட்டுமே Chrome ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்த வேண்டும். பிறரைத் தாக்கவோ மனதைப் புண்படுத்தவோ பயன்படுத்தக்கூடாது.
4.1 சில தயாரிப்புகள் (Google/மூன்றாம் தரப்பினர் உருவாக்கியவை) பிற Google தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய சில அம்சங்களைக் கொண்டிருக்கலாம். இதன்படி, இந்தத் தயாரிப்புகளிலும் சேவைகளிலும் இதுபோன்ற அம்சங்களைப் பயன்படுத்துவது https://policies.google.com/terms தளத்தில் உள்ள Googleளின் சேவை விதிமுறைகள், https://policies.google.com/privacy தளத்தில் உள்ள Googleளின் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுடன் Google சேவை-சார்ந்த சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
4.2 Google உருவாக்கிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் இந்த ஆன்லைன் ஸ்டோர் (Google உருவாக்கிய தயாரிப்புகளின் இறுதிப் பயனருக்கான கூடுதல் விதிமுறைகள்) சேவை விதிமுறைகள் பிரிவு 8ன் படி நிர்வகிக்கப்படுகிறது.
சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வரம்பு வரை, பதிவிறக்குவது, நிறுவுவது அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவது அல்லது இந்த விதிமுறைகளை மீறுவது உட்பட ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எல்லா உரிமைகோரல்கள், நடவடிக்கைகள், உரிமை வழக்குகள், செயல்முறை ஆணைகள், அத்துடன் இழப்புகள், பொறுப்புகள், சேதங்கள், செலவுகள் (வழக்கறிஞர்களுக்கான நியாயமான கட்டணங்கள் உட்பட) ஆகியவை மூலமும் அவற்றுக்கு எதிராகவும் Google, அதன் இணை நிறுவனங்கள், அவற்றின் குறிப்பிட்ட இயக்குநர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஏஜெண்ட்டுகளை ஆதரிக்கவும் நஷ்ட ஈடு செலுத்தவும் இழப்புகளுக்கு ஈடுகட்டவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
ஆன்லைன் ஸ்டோர் அல்லது அதிலுள்ள எந்தவொரு தயாரிப்பும் அணு சார்ந்த ஆலைகள், உயிர் காப்பு அமைப்புகள், அவசரகாலத் தகவல்பரிமாற்றங்கள், விமான வழிகாட்டல்/தகவல்பரிமாற்ற அமைப்புகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவதற்கானது அல்ல. மேலும் மரணம், தனிநபர் காயம், உடல்ரீதியாக/சுற்றுச்சூழலுக்குத் தீவிரப் பாதிப்பு ஏற்படும் அளவுக்குத் தயாரிப்பின் செயலைப் பாழாக்கும் எந்தவொரு செயல்பாட்டிலும் பயன்படுத்துவதற்கானது அல்ல.
7.1 இந்த விதிமுறைகளில் உங்களுக்கும் Googleளுக்கும் இடையே உள்ள முழுச் சட்ட ஒப்பந்தமும் அடங்கியுள்ளது, இது ஆன்லைன் ஸ்டோரையும் தயாரிப்புகளையும் நீங்கள் பயன்படுத்துவதை நிர்வகிக்கும். அத்துடன், ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தயாரிப்புகளில் உங்களுக்கும் Googleளுக்கும் இடையே ஏதேனும் ஒப்பந்தம் இருந்தால் அவற்றை மாற்றியமைக்கும்.
7.2 Google தலைமையில் இயங்கும் கூட்டு நிறுவனங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த விதிமுறைகளின் மூன்றாம் தரப்புப் பயனாளிகளாக இருப்பர் என்பதையும் அவ்வகையிலுள்ள பிற நிறுவனங்களுக்குப் பலனை (அல்லது அவர்களுக்குச் சாதகமான உரிமைகளை) அளிக்கக்கூடிய விதிமுறைகளின் எந்தக் கூற்றையும் நேரடியாக அமலாக்கவும் சார்ந்திருக்கவும் தகுதியானவர்கள் என்பதையும் ஏற்று ஒப்புக்கொள்கிறீர்கள். இதைத் தவிர, விதிமுறைகளுக்கு வேறு எவரும் அல்லது எந்த நிறுவனமும் மூன்றாம் தரப்புப் பயனாளிகளாக இருக்கமாட்டார்கள்.
7.3 எந்தவொரு அதிகார எல்லையிலும் தடை உத்தரவுத் தீர்வுகளுக்கு (அல்லது இதற்கு இணையான அவசரச் சட்டத் தீர்வுக்கு) பயன்படுத்த Google அனுமதிக்கப்படும் என ஒப்புக்கொள்கிறீர்கள்.
8.1 ஒரு தயாரிப்பைப் பதிவிறக்குவது, நிறுவுவது அல்லது பயன்படுத்துவது அல்லது அதன் குறிப்பிட்ட அம்சத்தை (”தயாரிப்பு) பயன்படுத்துவதன் மூலம் https://policies.google.com/terms தளத்தில் உள்ள Google சேவை விதிமுறைகளுக்கும் https://policies.google.com/privacy தளத்தில் உள்ள Google தனியுரிமைக் கொள்கைகளுக்கும் இணங்குவதாக ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
அதேபோல் பதிவிறக்குதல், நிறுவுதல், ஒரு தயாரிப்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பின்வரும் கூடுதல் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் (”விதிமுறைகளும் நிபந்தனைகளும்”) ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்.
8.2 தயாரிப்பின் இதுபோன்ற அம்சங்களைப் பயன்படுத்துவது https://www.google.com/chrome/terms/ தளத்தில் உள்ள Google Chrome & Chrome OSஸின் கூடுதல் சேவை விதிமுறைகள் https://www.google.com/chrome/privacy/ தளத்தில் உள்ள Chrome தனியுரிமை அறிக்கை, முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது மாற்றப்படும் Google சேவை சார்ந்த சேவை விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. தயாரிப்பைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும், மேலும் இந்தப் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற விதிமுறைகளுக்கும் இணங்க ஒப்புக்கொள்கிறீர்கள். ஏற்கவில்லை எனில் தயாரிப்பைப் பயன்படுத்தாமல் நிறுத்திவிடவும்.
8.3 இந்தத் தயாரிப்பு, இது தொடர்பான விஷயங்கள் மற்றும் ஆவணமாக்கல் முழுவதும் தனிப்பட்ட நிதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பைப் பயன்படுத்தும் பயனர் அமெரிக்க அரசாங்கத்தின் ஏஜென்சி, துறை, பணியாளர் அல்லது வேறு தரப்பினராக இருந்தால் தொழில்நுட்பத் தரவு/கையேடுகள் உட்பட தயாரிப்பைப் பயன்படுத்துவது, நகலெடுப்பது, மறுஉருவாக்கம் செய்வது, வெளியிடுவது, திருத்தம் செய்வது, தகவல் வெளியிடுவது, மாற்றுவது போன்றவை இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் ஆவணத்தில் அடங்கியுள்ள விதிமுறைகள், நிபந்தனைகள், உறுதிமொழிப் பத்திரங்கள் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அரசு நிறுவனங்களுக்கான அரசுக் கையகப்படுத்தல் ஒழுங்குமுறை 12.212 மற்றும் ராணுவ நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அரசுக் கையகப்படுத்தல் சேர்க்கை 227.7202 ஆகியவற்றுக்கு உட்பட்டு, தயாரிப்பைப் பயன்படுத்துவது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் மேலும் கட்டுப்படுத்தப்படும்.
8.4 ஒரு தயாரிப்பு Google டெவெலப்பர் விதிமுறைகள், பிற சட்ட ஒப்பந்தங்கள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றை மீறுகிறதா என்பதை அவ்வப்போது Google தீர்மானிக்கும். இதுபோன்ற நிலையில், உங்கள் சிஸ்டத்தில் உள்ள தயாரிப்புகளைத் தனது சொந்த விருப்பத்தின்படி தொலைநிலையில் இருந்து முடக்கும் அல்லது அகற்றும் உரிமை Googleளுக்கு உள்ளது. அவ்வப்போது, பிழைத்திருத்தங்கள்/மேம்பட்ட செயல்பாடு போன்றவை உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல) தயாரிப்புகளுக்கான புதுப்பிப்புகளை Google Chrome சரிபார்க்கலாம். உங்கள் பிரவுசரில் இந்தச் செயல்பாடு இருந்தால் இதுபோன்ற புதுப்பிப்புகள் சில சூழ்நிலைகளில் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தானாகவே கோரிக்கை செய்யப்பட்டு, பதிவிறக்கப்பட்டு, நிறுவப்படும் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
8.5 நீங்களோ கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி Google நிறுவனமோ முடித்துவிடும் வரை இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து பொருந்தும். எந்த நேரத்திலும் தயாரிப்பை உங்கள் சிஸ்டம்/சாதனத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவதன் மூலம் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முடித்துக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஏதேனும் விதியுடன் இணங்கத் தவறினால் Google அல்லது மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் உங்கள் உரிமைகள் தானாகவும் உடனடியாகவும் நிறுத்தப்படும். அத்தகைய நிலையில், தயாரிப்பை நீங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.
8.6 சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச நிலை வரை, பதிவிறக்குவது, நிறுவுவது அல்லது இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவது உட்பட ஏதேனும் தயாரிப்பை நீங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் எல்லா உரிமைகோரல்கள், நடவடிக்கைகள், உரிமை வழக்குகள், செயல்முறை ஆணைகள், இழப்புகள், பொறுப்புகள், சேதங்கள், சேதாரங்கள், செலவுகள் (வழக்கறிஞர்களுக்கான நியாயமான கட்டணங்கள் உட்பட) ஆகியவை மூலமும் அவற்றுக்கு எதிராகவும் Google, அதன் இணை நிறுவனங்கள், அவற்றின் குறிப்பிட்ட இயக்குநர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஏஜெண்ட்டுகளை ஆதரிக்கவும், நஷ்ட ஈடு செலுத்தவும், இழப்புகளுக்கு ஈடுகட்டவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
8.7 தயாரிப்பானது அணு சார்ந்த ஆலைகள், உயிர் காப்பு அமைப்புகள், அவசரகாலத் தகவல்பரிமாற்றங்கள், விமான வழிகாட்டல்/தகவல் பரிமாற்ற அமைப்புகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவதற்கானது அல்ல. மேலும் மரணம், தனிநபர் காயம் அல்லது உடல்ரீதியாக/சுற்றுச்சூழலுக்குத் தீவிரப் பாதிப்பு ஏற்படும் அளவுக்குத் தயாரிப்பின் செயலைப் பாழாக்கும் எந்தவொரு செயல்பாட்டிலும் பயன்படுத்துவதற்கானது அல்ல.
8.8 இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும், அத்துடன் குறிப்பு மூலம் பெற்ற பிற விதிமுறைகளும் தயாரிப்பு தொடர்பாக உங்களுக்கும் Googleளுக்கும் இடையே முழு ஒப்பந்தத்தையும் அமைக்கின்றன. இது தயாரிப்பை நீங்கள் பயன்படுத்துவதை நிர்வகிப்பதுடன், தயாரிப்பு தொடர்பாக உங்களுக்கும் Googleளுக்கும் இடையே இதற்கு முன்பும் சம காலத்திலும் உள்ள ஒப்பந்தங்களை முழுவதுமாக மாற்றியமைக்கிறது.
8.9 எந்தவொரு அதிகார எல்லையிலும் தடை உத்தரவுத் தீர்வுகளுக்கு (அல்லது இதற்கு இணையான அவசரச் சட்டத் தீர்வுக்கு) பயன்படுத்த Google அனுமதிக்கப்படும் என ஒப்புக்கொள்கிறீர்கள்.